உனக்கென உதித்தவள்... ✨
அத்தியாயம் 10
கண்டதும் காதல் மலரும்😍
மரத்தின் அருகே நிழலோடு நிழலாக நின்று கொண்டிருக்கும் வெண்பாவை பார்த்த மதி "வெ.. வெண்பா.." என்று தன் மெல்லிய குரலில் தயங்கி தயங்கி அழைத்தான். அவன் குரல் காற்றின் மூலம் இசையாய் அவள் காதுகளில் ஓத, சற்றென அலையாய் திரும்பிய அவளின் மதி போன்ற முகத்தின் கண்கள் அவன் கண்களோடு இணைந்தது. மதி அவள் கண்களின் சிக்கி கொண்டவனாய் மௌனத்தின் உலகிற்கு பயணம் செய்தான். இந்த மௌனமே சில நிமிடங்கள் அலைக்கழித்தது. "உன் நண்பனின் கனவு நிறைவேறும் நேரம் வந்து விட்டது போலவே.."என்று வெண்பா தன் கன்னங்கள் சிவக்க முழு வெட்கம் கொண்டு கூறியவுடன் ஏதும் புரியாதவனாய் பல கேள்விகளுடன் வெண்பாவை பார்த்தான் மதி. "உன் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் சொல்றேன்.." என்ற கர்ஜனை குரல் கேட்டவுடன் குரல் வந்த திசையை நோக்கி திரும்புகிறான் மதி. "இனியன் நீயா..?" என்று கேள்விகள் நிறைந்த முகத்துடன் கேட்ட அவனுக்கு மேலும் கேள்விகளே அதிகரித்தன. "ஆமாம் நான்தான்.. நான் சொல்றேன் எல்லாம்.. "என ஆரம்பித்தான் இனியன். "உன்னை பார்த்த முதல் கணமே வெண்பா உன்னை விரும்ப ஆரம்பித்து விட்டாள். உன் நண்பன் உன்னிடம் அவன் கண்ட கனவை சொல்லும்போது வெண்பா அங்குதான் இருந்தாள். அன்று முதல் வெண்பா உன்னை தினமும் நீ அறியாதவாறு கண்டு ரசித்தாள். நீ அவளிடம் பேச வேண்டும் என்பதற்காக அவளே ஜீவிகாவிடம் கடிதம் கொடுத்து வெண்பாவிடம் கொடுக்க சொன்னாள். அன்றுதான் எனக்கு தெரியும் வெண்பா உன்னை விரும்புகிறாள் என்று. அவள் என்னிடம் செலவிட்ட அனைத்து கணங்களும் உன்னை பற்றி பேச மற்றும் தெரிந்து கொள்ளத்தான். அவளால் தான் உன்னை நான் முழுதும் புரிந்து கொண்டேன். நம் வகுப்பறைக்கு அடிக்கடி வருவதும் உன்னை பார்க்கத்தான்.. என்னை அல்ல. அன்று நூலகத்தில் புத்தகத்தைக் கீழே தள்ளி ஒலியை உருவாக்கியதும் தலை குனிந்த நீ அவளைப் பார்க்க வேண்டும் என்றுதான் தான்.." என்று இனியன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு விடை பெற்றான். இவ்வாறு இனியன் கூறியதும் மதியின் மனம் மீண்டும் ஒரு கனவா..? என்ற சந்தேகத்தில் சூழ்ந்தது. அவனின் முகத்தை கண்டதும் அதை உணர்ந்த வெண்பா "இது கனவு அல்ல உண்மை தான்.." என கூறியவுடன் "இதை நீ ஏன் அன்றே கூறவில்லை.." என கேட்டான் மதி. "அன்று நான் சொல்லிருப்பேன் என் விருப்பத்தை.. ஆனால் நீங்கள் வாசுவிடம் கூறிய பதில் என்னை சொல்ல அனுமதிக்கவில்லை. அன்று உங்கள் கருத்தும் என் கருத்தும் வேறுப்பட்டிருந்தது. அது மட்டும் அல்லாமல் நீங்கள் என்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று நானும் நினைத்தேன்.. இப்பொழுது நீங்கள் நினைத்ததும் நிறைவேறியது நான் நினைத்ததும் நிறைவேறியது.." என்றாள் வெண்பா. மதியின் உள்ளம் மகிழ்ச்சி எனும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. அவன் கொண்ட இன்பத்தை வரையறுக்க வார்த்தைகளை தமிழில் இனிதான் கண்டுப்பிடிக்க வேண்டும். அவனின் இன்பம் நிறைந்த அந்த அழகு முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது வெண்பா கூறிய அந்த காதல் வரிகள் "வெண்பா உனக்கென உதித்தவள் மதி".
முற்றும்.
Nice..👌👌
ReplyDelete