இது கதையல்ல...
மனதில் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி, அதை கூற முயற்சிக்கும் போது... என்று எழுதிக் கொண்டிருக்கையில் தொண்டையில் எதோ சிக்கிக் கொண்டதுப் போல் இருந்தது.
டேய்! தண்ணி குடிடா என்று குணா தலையை தட்ட பயத்துடன் திரும்பிய வேலு பதட்டதத்துடன் எப்பையும் கதவை தட்டிட்டு வர மாட்டியாடா என்று வார்த்தைகளை சிதறினான்.
நீ இன்னும் எழுதி முடிக்கலையா என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான் குணா.
மறுபடியும் மனதில் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி.. என்று எழுதியததை படித்து முடிப்பதற்குள் குணா வந்துவிட்டான்.
முடித்து விட்டாயா என்று குணா கேக்க..வேலு கோபத்துடன் நான் என்ன டெய்லி லவ் லெட்டர் எழுதி ஒரு பொண்ணுக்கு கொடுத்துட்டா இருக்கேன். பொறுமையாதான் எழுத முடியும் என்று கூறினான்.
உடனே குணா நம்ம டீலிங் உனக்கு ஞாபகம் இருக்குல்ல எனக்கு லவ் லெட்டர் எழுதி குடுத்தாதான் உன்னை இந்த வீட்டுக்குள்ள விடுவேன் என்று கூறிவிட்டு சென்றான்.
எப்படியோ தடுமாறி ஏதோ ஒரு கதையை கவிதையாக்கி வேலு குணாவிடம் கொடுத்தான்.
குணா அந்த கடிதத்தை தன் பாசமிகு காதலிக்கு கொடுக்க ஆவலாக விரைந்து சென்றான்.
அவன் காதலிக்காக காத்து கொண்டிருக்கும் அந்த வேளையில் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு லாரி அவன் மேல் மோதியது.
வேலு கடிதத்தை எழுதி கொடுத்த மகிழ்ச்சியில் உறங்கி கொண்டிருக்க பட்டென்று ஒரு சத்தம். எழுந்து பார்த்தால் குணா அருகில் கோபத்துடன் அமர்ந்திருந்தான்.
இப்ப என்ன ஆச்சு என்று வேலு கேக்க, இன்றும் என் கடிதத்தை தர முடியாமல் போனது என்று குணா கூற, இதே வேலையா போச்சு உனக்கு காதல் மயக்கத்துல கண்ணு தெரியாம போனினா என்ன பண்றது!
இந்த காலத்துல நல்லா இருக்க மனுசனுக்கே லவ் செட் ஆகல இதுல நீ பேய் வேற..எப்படி செட் ஆகும் என்று வேலு கூற, உடனே குணா ஏன் பேய்க்கு லவ் வர கூடாதா? கல்யாணம் பண்ண கூடாதா?? என்று கூறி மரியாதையா இன்னொரு லெட்டர் எழுதி குடு என்று கூறினான்.
நானும் என் பேபி பேயும் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, பேயா பெத்து போடுவோம் என்று குணா கூறினான்.
சரி என்று கூறி மறுபடியும் கடிதம் எழுத " என் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரில.. அதை சொல்ல வரும் போது தான் உன்னை லாரி இடிக்க வருதுன்னு நினச்சு உன்னை இழுத்து என் எதிரே வந்த லாரி நம்மளை மோத விதி இருவரையும் ஆவியாக்கி விட்டது!! அதை மன்னிச்சு என் காதலை ஏற்பாயாக..
ஐ லவ் யு பேபி
இப்படிக்கு,
குணா
காதலிக் கையை குணா கைப்பிடிப்பானா? ஆவிகளின் காதல் கைக்கூடுமா? என்று எதிர்பார்காத திருப்பங்களுடன் இந்த கதையை படித்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்🙏
இது கதையல்ல.. சும்மா!!!
Summa... Nice
ReplyDeleteWonderful attempt
ReplyDelete