உனக்கென உதித்தவள்... ✨
அத்தியாயம் 8
உணர்ச்சி கடலில்..🌊
கல்லூரி முழுவதும் நிகழ்ச்சிகான வேலைப்பாடுகள் ஆரவாரத்துடன் நடந்துக் கொண்டிருந்தன. அனைவரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை முழு ஈடுபாட்டுடனும், மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் செய்து வந்தனர்.
வெண்பாவும் தான் கல்லூரியில் அடி எடுத்து வைத்து நடைபெறும் முதல் நிகழ்வு என்பதால் தன்னை முழுவதுமாய் அர்பணித்து தன் பொறுப்புகளை சிறு குழந்தைப் போல ஒரு கள்ளமற்ற உள்ளத்துடன் அங்கும் இங்கும் ஓடி ஆடி அரங்கேற்றி வருகிறாள். அவள் அரங்கேற்றம் நடக்கும் அந்த திடலைத் தன் தோழிகளுடன் சிரித்து பேசியவாறு மலர்கள் கொண்டு அலங்கரிக்கும் தருணத்தில் அவ்வழியே தன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டே மதி கடந்து செல்கிறான்.
வெண்பாவின் அந்த புன்னகைச் சத்தம் அவன் கால்களை கட்டி போட்டது மட்டும் அல்லாமல் அவன் பார்வையையும் அவள் பக்கம் திருப்பியது. அவனின் இதயம் வழக்கத்தை விட அதிகமாக துடித்தது. அருகில் இருந்த நண்பர்களின் கேளிக்கை சத்தம் அவன் காதுகளுக்கு இசையாய் ஒலித்தது. வெண்பா அவன் கண்களுக்கு மலர்களின் நந்தவனத்தில் மலரும் ஒரு மலராகவே காட்சி அளித்தாள். அவன் இதுவரை அனுபவிக்காத ஒரு புது உணர்வு. கண்கள் அவளை விட்டு மீள மறுத்தன.
"டேய் மதி இங்க ஏன்டா நிக்குற..?" என வாசு கேட்க அதை சற்றும் உணராதனாய், தன் நிலை மறந்து வெண்பாவை நோக்கியே நின்று கொண்டிருந்தான். திடீரென அந்த இடத்தில் இனியன் தோன்ற தன் இயல்பான நினைவுகளை பெற்று மீண்டான் மதி. இதற்கு இடையில் ஜீவிகா "இதை நான் எவ்வாறு செய்வேன்.." என்ற அச்சம் நிறைந்த மன கேள்விகளுடன் அந்த திடலில் அலைப்பாய்ந்து கொண்டிருந்தாள்.
இனியன் வெண்பாவுடன் பேசிய அந்த நடை மதியின் மனதில் ஒரு இனம் புரியாத வலியை உருவாக்க அந்த இடத்தை விட்டு காற்றாய் பறந்தான் அவன். இனியன் முழு உரிமையுடன் அவளிடம் பேசிய விதம் அங்கு உள்ளவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை அளித்தது. பொதுவாக இனியன் யாரிடமும் பணிவாகவும் பாசத்துடனும் பேச மாட்டான். இதனால் இனியனின் செயல்கள் அனைவருக்கும் கானல் நீர் போலவே இருந்தது. அன்று முழுவதும் மதியின் சிந்தனைகள் முழுவதிலும் வெண்பாவே பரவி இருந்தாள். அவன் மனம் மீண்டும் அவளை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏவல் காத்த கிளி போலக் காத்திருந்தது. மதி வென்பாவின் நினைவுகளின் கடலில் தன்னை மறந்து நீந்தி கொண்டிருக்க, ஆங்காங்கே தோன்றும் மலை தடுப்புப் போல ஜீவிகா அவன் முன் தோன்றி ஒரு கடிதத்தை நீட்டுகிறாள்.
தொடரும்...
Comments
Post a Comment