உனக்கென உதித்தவள்... ✨
அத்தியாயம் 9
எண்ணங்கள் நிறைவேறுமா.?
ஜீவிகா திடீரென கடித்தத்தை நீட்ட அவள் இதுவரை யாரென தெரியாத மதி அதை வாங்குவதற்கு தயக்கம் கொண்டு நின்றிருக்கையில் "நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் அந்த கடிதத்தை என்னிடம் தான கொடுக்க சொன்னாங்க.. நீ என்ன இவன்ட கொடுக்குற.."என்று கோபம் நிறைந்த வார்த்தைகளை ஜீவிகாவிடம் வீசினான் இனியன். "அண்ணா உங்க கிட்ட கொடுக்க சொல்ல தான் இவங்க கிட்ட கொடுத்தேன்" என்று பவ்ய குரலில் கூறிவிட்டு அங்கு இருந்து நகர்ந்தாள் ஜீவிகா.
இனியன் தன் பார்வையால் எதிரில் இருந்த மதியை எரித்தான். மதியும் அதற்கு சற்றும் குறையாமல் கோபக் கனலை வீசினான். அவர்களுக்குள் பார்வை கனல் முழுவதும் பற்றி எரிவதற்குள் அந்த இடத்தில் வெண்பா தோன்றி இனியனை அங்கு இருந்து அழைத்து சென்றாள்.
அன்று மாலை நிகழ்ச்சி தொடங்கியது மயிலின் அழகிய வரவேற்பு நடனத்துடன். அனைவரும் பங்கேற்றனர் அந்த அன்பு மற்றும் மகிழ்ச்சியின் சங்கமத்தில். நிகழ்வின் இறுதியில் வெண்பா நன்றியுரை கூறிய அந்த நளினம் மதியின் மனதில் மீண்டும் ஒரு மின்னலை ஏற்படுத்தியது.
அன்று முதல் அவன் வெண்பாவை ஒரு நாளைக்கு ஒரு தடவையாது பார்த்து விடுவான். வெண்பாவின் அந்த அன்பு மற்றும் குழந்தைத் தனம் நிறைந்த செயல்கள் மற்றும் பாவனைகள் அவனை அறியாமலே அவளை விரும்ப செய்தது. அவன் மனம் தினமும் அவள் குரலை கேட்க வேண்டும் என துடிக்க ஆரம்பித்தது. அவளுக்கு தெரியாமலே தினமும் அவளை மறைந்து ரசிக்க ஆரம்பித்தான் மதி.
வெண்பா மற்றும் இனியன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். வகுப்பு நேரங்களை தவிர மற்ற மணித்துளிகள் அனைத்தையும் இனியனுடன் கழித்தாள் வெண்பா. இனியனும் வெண்பாவிடத்தில் மிகுந்த பாசம் கொண்டிருந்தான். வெண்பாவிடம் தோழமை கொண்ட நாள் முதல் அவன் பொறுமையாக இருந்த விதம் மற்ற மாணவர்கள் அனைவருக்கும் அவனை புதிய இனியனாக காண்பித்தது. வெண்பா தன் வகுப்பறையை விட அதிகமாக இனியனின் வகுப்பிலே காலம் கடந்தாள்.
ஒரு நாள் மதி நூலகத்தில் புத்தகம் வாசித்து கொண்டிருக்க அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் புறமாக அவன் நோக்குமாறு வந்து அமர்ந்தாள் வெண்பா. அவளை கண்டவுடன் நேருக்கு நேர் வெண்பாவை காண முடியாமல் தலை குனிந்தான் மதி.
திடீரென புத்தகம் விழும் சத்தம் கேட்டவுடன் இன்னும் பதற்றம் அதிகரித்து அங்கு இருந்து மறைந்து விட்டான் மதி.
வெளியே வந்த மதி வெண்பாவை பற்றிய தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் வாசுவிடம் சொல்லி கொண்டிருக்கும் தருணத்தில் நூலகத்தில் இருந்து இனியனும் வெண்பாவும் வந்தார்கள். அவர்கள் இருவரையும் கண்டவுடன் மதியின் மனது அனுபவிக்கும் வலிகளை சொல்ல அவனிடம் வார்த்தைகள் இல்லை. திடீரென மௌனத்திற்கு சென்ற மதியை கண்ட வாசு "கல்லூரியே அவர்கள் விரும்புவதாக பேசி கொண்டிருக்கிறது..இப்போது சொன்னால் என்னடா பன்ன முடியும்" என்று கூறிவிட்டு "உனது எண்ணங்களை அவளிடம் கூறிவிடு அதான் உனக்கும் நல்லது" என்று இந்த வரிகளையும் கோர்த்து தயக்கமுடன் கூறினான்.
வெண்பா முதல் நாளுக்கு பிறகு என்னிடம் பேசியது கூட இல்லை. இனியனிடம் பேசிய பிறகு இன்னும் என்னை தவறாக மட்டுமே புரிந்து கொண்டிருப்பாள் என்று அவனுக்குள்ளே பேசிப் புலம்பி கொண்டிருந்தான் மதி. அவனின் மனம் வெண்பாவிடம் உணர்வுகளை கூற சொல்கிறது. மூளையோ அதை தடுக்கிறது. மதி மனதிற்கும் மூளைக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறான். இவ்வாறே காலங்கள் கடந்தது.
அன்று கல்லூரியின் இறுதி நாள். நான்காம் வருட மாணவர்கள் சோகக் கடலில் மூழ்கி இருந்தனர். இதற்கு மேல் நடப்பதற்கு எதுவும் இல்லை என மனதை தைரிய உறையால் போர்த்தி கொண்டு வெண்பா இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான் மதி.
தொடரும்...
Comments
Post a Comment