இது கதையல்ல...
மனதில் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி, அதை கூற முயற்சிக்கும் போது... என்று எழுதிக் கொண்டிருக்கையில் தொண்டையில் எதோ சிக்கிக் கொண்டதுப் போல் இருந்தது. டேய்! தண்ணி குடிடா என்று குணா தலையை தட்ட பயத்துடன் திரும்பிய வேலு பதட்டதத்துடன் எப்பையும் கதவை தட்டிட்டு வர மாட்டியாடா என்று வார்த்தைகளை சிதறினான். நீ இன்னும் எழுதி முடிக்கலையா என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான் குணா. மறுபடியும் மனதில் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி.. என்று எழுதியததை படித்து முடிப்பதற்குள் குணா வந்துவிட்டான். முடித்து விட்டாயா என்று குணா கேக்க..வேலு கோபத்துடன் நான் என்ன டெய்லி லவ் லெட்டர் எழுதி ஒரு பொண்ணுக்கு கொடுத்துட்டா இருக்கேன். பொறுமையாதான் எழுத முடியும் என்று கூறினான். உடனே குணா நம்ம டீலிங் உனக்கு ஞாபகம் இருக்குல்ல எனக்கு லவ் லெட்டர் எழுதி குடுத்தாதான் உன்னை இந்த வீட்டுக்குள்ள விடுவேன் என்று கூறிவிட்டு சென்றான். எப்படியோ தடுமாறி ஏதோ ஒரு கதையை கவிதையாக்கி வேலு குணாவிடம் கொடுத்தான். குணா அந்த கடிதத்தை தன் பாசமிகு காதலிக்கு கொடுக்க ஆவலாக விரைந்து செ...